20 நாட்களில் திருமணம்..புதுப்பெண் மீது ஆசிட் வீச்சு..சுட்டுப்பிடித்த பொலிஸ்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆனதால் இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமண நிச்சயதார்த்தம்
உத்தர பிரதேச மாநிலம் தாரௌலி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணொருவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் குறித்த பெண் தனது தாயாருடன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவர் மீது ஆசிட் வீசிவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியபோது, அனில் வர்மா என்ற நபரே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
iStock
சுற்றி வளைத்து
கைது குறித்த பெண்ணை அவர் சில காலமாக அறிந்திருந்தார். அவருக்கு வேறொருவருடன் திருமணம் என்பதால் ஆத்திரத்தில் ஆசிட் வீசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அனில் வர்மா பதுங்கியிருக்கும் இடத்தை அறிந்த பொலிஸார் அவரை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது அவர் தப்பி ஓட முயன்றபோது பொலிஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அத்துடன் ராம் பச்சன் என்ற மற்றொரு நபர் தப்பி ஓட முயன்றபோது காயமடைந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண், தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
எனினும், பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் இதுதொடர்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என்றனர். ஆனாலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |