பிரெஞ்சுக் குடியுரிமை பெறுதல்: சில பயனுள்ள தகவல்கள்
பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது நீண்ட சிக்கலான ஒரு நடைமுறையாகும். அதற்கு ஏராளமான ஆவணங்களை நிரப்பவேண்டியிருக்கும்...
குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு ஒரு விடயம் மிகவும் முக்கியம், அது, பிரான்ஸ் வரலாறு, புவியியல், அரசியல் மற்றும் கலாச்சாரம் குறித்து நன்கு அறிந்துவைத்திருத்தலாகும்.
இந்தக் கட்டுரையில், பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது தொடர்பில் பயனுள்ள சில விடயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது தொடர்பில் பயனுள்ள சில தகவல்கள்
பிரெஞ்சுக் குடிமகன் அல்லது குடிமகள் ஆவது கடினமான நடைமுறைதான். நீங்கள் எந்த விடயத்தின் அடிப்படையில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறீர்கள், திருமணம் அல்லது குடும்ப அடிப்படையிலா என்பது போன்ற விடயங்களைப் பொறுத்து அதன் அடிப்படையில் அதற்கு பல விடயங்கள் அவசியம் தேவைப்படும்.
அத்துடன், நீங்கள் பிரெஞ்சு மொழியில் பேசுவதும் எழுதுவதும் தேவைப்படும்.
பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு பல ஆவணங்கள் தேவைப்படும், நீண்ட காலம் காத்திருக்கவும் வேண்டும். அதாவது, 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை நீங்கள் காத்திருக்க நேரிடலாம்.
நடைமுறையின் இறுதியில், நேர்முகத் தேர்வு அல்லது நேர்காணலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். பொதுவாக அது பிரெஞ்சு மொழியில் நடத்தப்படும். அதில், பிரான்ஸ் நாட்டின் வரலாறு, புவியியல், கலாச்சாரம், அரசியல் முதலான விடயங்கள் குறித்த கேள்விகள் இடம்பெறும்.
உங்கள் நேர்காணலுக்கு உதவும் Livret du Citoyen என்ற புத்தகத்தை அரசின் இனையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலதிக தகவல்களுக்கு...
https://www.thelocal.fr/20220809/test-could-you-pass-the-french-citizenship-exam/