மதுரையில் விஜய் ரோடுஷோ நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸார் எச்சரிகை
மதுரையில் விஜய் அனுமதியின்றி ரோடுஷோ நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸார் எச்சரிகை
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறவுள்ளதால் இன்று மாலை விஜய் தனி விமானம் மூலம் மதுரை வந்து சாலை வழியாக செல்லவுள்ளார்.
இந்த தகவலை அறிந்த விஜய் கட்சியின் தொண்டர்கள் இன்று காலை முதலே விமான நிலையத்தில் குவிய தொடங்கினர். அதாவது மதுரை விமான நிலையத்திற்கு வரும் விஜய் ரோடு ஷோ நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து மதுரை மாநகர பொலிஸ் கமிஷனர் லோக நாதன் கூறுகையில், "கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வருகிறார்.
ஆனால் அவர் ரோடு ஷோ நடத்துவது குறித்து பொலிஸாரிடம் இதுவரை அனுமதி கேட்கப்படவில்லை. விஜய் அனுமதியின்றி ரோடுஷோ நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |