நடிகர் அஜித் அன்றே இதை செய்துவிட்டார்! ட்விட்டரில் வைரலாகும் பதிவு
சென்னையில் நேற்று 12 மணி நேரத்திற்கும் மேலாக நின்று நடிகர் விஜய் மாணவர்களுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய நிலையில், நடிகர் அஜித் 2004ம் ஆண்டே சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நின்று மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டாத ஒப்பீடு செய்து ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய்-யின் கல்வி விருது வழங்கும் விழா
தமிழகத்தில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று மாணவர்களுக்கு நடிகர் விஜய் சார்பாக பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடத்தப்பட்டது.
இதில் நடிகர் விஜய் 12 மணி நேரத்திற்கும் மேலாக மேடையில் தொடர்ந்து நின்று மாணவர்களுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இதையடுத்து நேற்று செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என அனைத்திலும் நடிகர் விஜய்யின் பேச்சு மற்றும் ரியாக்ஷன் என சர்வமும் விஜய் மட்டுமே நிறைந்து இருந்தார்.
முன்பே அஜித் குமார் இதை செய்து விட்டார்
இந்நிலையில் ட்விட்டர் பயனர் ஒருவர் நடிகர் அஜித்-தின் பழைய புகைப்படங்களை வெளியிட்டு, கடந்த 2004ம் ஆண்டே நடிகர் அஜித்குமார் கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கும் மேலாக நின்று 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
2004 ல தலைவர் #அஜித்குமார் அவர்கள் திருவண்ணாமலையில் 10, 000 மேற்பட்ட மாணவர்கள் ..ஆசிரியர்கள்.. அவர்களின் குடும்பத்தினர் .. மற்றும் ரசிகர்களுடன் 15 மணிநேரத்திற்கு மேல் நின்றுகொண்டே புகைப்படம் எடுத்து மரம் நட வலியுறுத்தியும்.நம் நகரத்தை துய்மையாக வைத்துகொள்ள வலியுறுத்தினார் அன்றே pic.twitter.com/079eJGWdMc
— saravanan Thiruvannamalai (@saravanan7010) June 18, 2023
மேலும் திருவண்ணாமலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் மரம் நட வலியுறுத்தியும், நம்முடைய நகரங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் வலியுறுத்தினார் என தகவலை பகிர்ந்துள்ளார்.
2004 ல தலைவர் #அஜித்குமார் அவர்கள் திருவண்ணாமலையில் 10, 000 மேற்பட்ட மாணவர்கள் ..ஆசிரியர்கள்.. அவர்களின் குடும்பத்தினர் .. மற்றும் ரசிகர்களுடன் 15 மணிநேரத்திற்கு மேல் நின்றுகொண்டே புகைப்படம் எடுத்து மரம் நட வலியுறுத்தியும்.நம் நகரத்தை துய்மையாக வைத்துகொள்ள வலியுறுத்தினார் அன்றே pic.twitter.com/p0bKxqoSJf
— Actor Ajith Official (@AnnamalaiMoorth) June 18, 2023