நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்.
அஜித்குமாரின் தாயார் மறைவு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், அஜித்தின் தாயார் 84 வயதான மோகினி மணி வயது மூப்பு காரணமாக இன்று காலமாகியுள்ளார்.
துபாயில் உள்ள அஜித்குமார் உடனடியாக இந்தியா திரும்புகிறார்.
அவரின் இறுதிச்சடங்கு சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் நடைபெற உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அஜித்தின் அப்பா சுப்பிரமணியனம் இறந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித்குமாரின் தாயார் மறைவிற்கு திரைத்துறையினர், அரசியல்வாதிகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 30, 2026
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான…
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |