நான் உயிருடன் தான் இருக்கிறேன்.,இறந்துவிட்டதாக கூறிய பூனம் பாண்டே இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ
நான் உயிருடன் தான் இருக்கிறேன், புற்றுநோய் காரணமாக நான் உயிரிழக்கவில்லை என்று பிரபல பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பூனம் பாண்டே உயிரிழந்து விட்டதாக பரவிய தகவல்
பிரபல பாலிவுட் நடிகை மற்றும் சமூக ஊடகத்தில் அதிக செல்வாக்கு கொண்ட வருமான பூனம் பாண்டே நேற்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய்(cervical cancer) காரணமாக உயிரிழந்து இருப்பதாக பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மேலாளர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதில், உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊரில் வியாழக்கிழமை இரவு பூனம் பாண்டே உயிரிழந்து விட்டதாகவும், அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்து இருந்தார்.
2013ல் “நாஷா” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி கங்கனா ரனாவத் நடத்திய “லாக் அப்” நிகழ்ச்சியின் பிரபலமான 32 வயது நடிகை பூனம் பாண்டே உயிரிழந்து விட்டதாக வெளியான தகவல் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான் உயிருடன் தான் இருக்கிறேன்
இந்நிலையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நான் உயிரிழக்கவில்லை, நான் உயிருடன் தான் இருக்கிறேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், என்னை மன்னிக்கவும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த உரையாடலை ஏற்படுத்தவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தான் நான் உயிரிழந்து விட்டதாக கூறினேன்.
உயிரை பறிக்கும் நோய் என்பதாலும், இந்த நோய்க்கு அவசர கவனம் தேவைப்படுவதாலும், என்னுடைய மரண செய்தி மூலம் இதற்கான கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தேன் என பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும் மற்ற புற்றுநோய்களை போல் அல்லாமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முற்றிலுமாக குணப்படுத்த கூடியது என்றும் அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டு, பூனம் பாண்டே இப்போது வீடியோ வெளியிட்டு இருப்பது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Indian Model actor Poonam Pandey fake his death, actor Poonam Pandey says I fake my death for create cervical cancer awareness, Poonam Pandey release fake death claim controversy video