லட்டு விவகாரத்திற்கு ஒரே வார்த்தையில் பதில் சொன்ன நடிகர் ரஜினிகாந்த்
பரபரப்பாக பேசப்படும் திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ரஜினிகாந்த் கருத்து
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது மங்களகிரியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியின் கடந்த ஆட்சியில் திருப்பதியின் புனிதத்தை கெடுத்து விட்டனர் என்றார்.
மேலும், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பில் கலப்பட பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், நீங்கள் மிகப்பெரிய ஆன்மீகவாதி.
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "சாரி, நோ கமெண்ட்ஸ்" என்று சொல்லிவிட்டு பதில் அளிக்காமல் சென்றார்.மேலும், வேட்டையன் படம் குறித்த கேள்விக்கு, "வேட்டையன் படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |