பார்த்தாலே எரிச்சலா இருக்கு! நடிகர் சந்தானம் வீடியோ வெளியாகி ஏற்படுத்தியுள்ள சர்ச்சை
நகைச்சுவை நடிகர் சந்தானம் புலியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அவர் விலங்கு துஷ்பிரயோகத்தை ஊக்குவிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
புலி வாலை பிடித்த சந்தானம்
நடிகர் சந்தானம் மிருகக்காட்சி சாலையில் புலியுடன் இருக்கும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். அதில், அவர் தனது கையில் புலியின் வாலைப் பிடித்து உள்ளார். அதைத் தொடர்ந்து ஒரு மிருகக்காட்சிசாலையின் பணியாளர் புலியை எழுப்புவதற்காக அதன் தலையில் குத்தினார்.
இதையடுத்து பலரும் விலங்குகளை கொடுமைப்படுத்துவது போல உள்ளது என தெரிவித்தனர். நீங்கள் புலியை நேசிப்பதாக கூறியுள்ளீர்கள், ஆனால் இதை பார்த்தால் எரிச்சலூட்டும் வகையில் கொடூரமாக உள்ளது என ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
Idharku per than ? valai pidikratha ?#tigerlove #traveldiaries pic.twitter.com/1uW77pmPgz
— Santhanam (@iamsanthanam) December 25, 2022
இது என்ன வகையான பொறுப்பற்ற நடத்தை?
இது என்ன வகையான பொறுப்பற்ற நடத்தை? நீங்கள் விலங்குகளை துஷ்பிரயோகம் செய்வதை ஊக்குவிக்கிறீர்கள் என்பதை உணர்ந்தீர்களா? என பெண்ணொருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இப்படி பலரும் சந்தானத்தை விமர்சித்துள்ளனர். இது தொடர்பில் அவர் எந்தவொரு விளக்கமும் இன்னும் அளிக்கவில்லை.
There is surely no #tigerlove here.
— Shashank Shekhar Jha (@shashank_ssj) December 27, 2022
Annoying and cruel.
What kind of irresponsible behaviour is this? Do you realise you are encouraging animal abuse? In which world is it okay to keep a wild animal like this and stun it to wake up?
— Lavanya ?️???? (@lav_narayanan) December 26, 2022