“ஹிந்தியில் தான் பேச வேண்டும்” CRPF வீரர்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்
மதுரை விமான நிலையத்தில் நடிகர் சித்தார்த்தின் பெற்றோர்களை இந்தியில் பேச சொல்லி சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் அவமரியாதை செய்துள்ளனர்.
இந்தியில் பேச சொல்லி அவமரியாதை
தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு இந்தி உட்பட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்தார்த்.
அவரது பெற்றோர் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள மதுரை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளனர், அப்போது அவர்களது உடைமைகளை பரிசோதனை செய்த சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் நடிகர் சித்தார்த்தின் பெற்றோரிடம் கடுமையான தோனியில் ஹிந்தியில் பேசியுள்ளனர்.
Actor Siddharth-நடிகர் சித்தார்த்(Twitter)
அப்போது ஆங்கிலத்தில் பேச முயன்ற நடிகர் சித்தார்த்தின் பெற்றோரிடம் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் தங்களிடம் ஹிந்தியில் தான் பேச வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
மேலும் ஆளே இல்லாத மதுரை விமான நிலையத்தில் அவர்களை 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வைத்துள்ளனர்.
நடிகர் சித்தார்த் கண்டனம்
இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்த நடிகர் சித்தார்த், என் வயதான பெற்றோரின் பையில் இருந்த சில்லறை காசுகள் வரை எடுக்க சொல்லியுள்ளனர், அப்போது என் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும், தொடர்ந்து ஹிந்தியில் பேசிய படி கடுமையான நடந்து கொண்டுள்ளனர்.
மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 28, 2022
திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு
குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென @aaimduairport கோரியுள்ளேன்.#Siddharth #Actor #Tamil #StopHindiImposition pic.twitter.com/TjpUJRQBgd
மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று கூறியதாகவும் நடிகர் சித்தார்த் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர் என்று சம்பந்தப்பட்ட சி.ஜ.எஸ்.எப் வீரர்களை நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார்.
இதற்கிடையில் நடிகர் சித்தார்த்தின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு இணையவாசிகள் மத்தியில் வைரலாகி வருகிறது.