இந்தியை திணிக்க மாட்டேன் என்று இந்தியில்தான் அமித் ஷா கூறினார்.., நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து
மத்திய அரசு மும்மொழிக் கொள்கை விவகாரம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து
வட மாநிலங்களில் மும்மொழிக்கொள்கை அமலில் உள்ளது. உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, உத்தராகண்ட், இமாச்சால பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்கள் இந்த கொள்கையை பின்பற்றுகின்றன.
இந்த மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மும்மொழி பின்பற்றப்படுகிறது. அவற்றில் ஆங்கிலமும், இந்தியும் கட்டாயப் பாடங்களாக உள்ளன.
ஆனால், தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், "இந்தியை திணிக்க மாட்டேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியில்தான் சொல்லிவிட்டு சென்றார்.
அவரவருக்கு பிடித்த மொழிகளில் படித்துக் கொள்ளலாம். மும்மொழிக் கொள்கை தேவையில்லாத ஒன்று. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு வீராணம் பைப் வழியாக வீடு வந்து சேர்ந்தேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |