ரூ.24 ஆயிரத்திற்கு பதிலாக 81 டிரில்லியன் டொலரை தவறாக அனுப்பிய பிரபல வங்கி.., அடுத்து நடந்தது என்ன?
வாடிக்கையாளர் ஒருவருக்கு 280 டொலர் அனுப்புவதற்கு பதிலாக 81 டிரில்லியன் டொலரை Citi group வங்கி தவறாக அனுப்பியுள்ளது.
280 டொலருக்கு பதிலாக
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி குரூப் வங்கியானது உலக முன்னணி வங்கியாக உள்ளது. இந்த வங்கியில் ஊழியர்களால் தவறான பணபரிமாற்ற சேவைகள் அடிக்கடி நடைபெறுகின்றன.
அந்தவகையில் தற்போது சிட்டி குரூப்பை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு 280 டொலர் அனுப்புவதற்கு (24,000 ரூபாய்) பதிலாக 81 டிரில்லியன் டொலர்களை வரவு வைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பைனான்சியல் டைம் வெளியிட்ட செய்தியின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் இந்த தவறான பணப்பரிமாற்றம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. மேலும், 90 நிமிடங்களில் இந்த தவறை கண்டறிந்து சரிசெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியரின் டைப்பிங் எரர் காரணமாக இந்த தவறு நடந்தது என்று கூறுகின்றனர். இந்த தவறை இரண்டாவது ஊழியரும் கண்டுபிடிக்ககாமல் விட்டுள்ளார். இதனால் தான் வாடிக்கையாளருக்கு பணம் சென்றுள்ளது.
பின்னர், மூன்றாவது ஊழியர் தான் இந்த தவறை கண்டறிந்துள்ளார். இதுகுறித்து சிட்டி குரூப் குழுமத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "லெட்ஜர் கணக்கினை பார்வையிடும் போது இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டது" என்றார்.
கடந்த ஆண்டில் இதுவரை சிட்டி குருப் வங்கி 10 முறை தவறுதலாக வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்பி திரும்ப பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |