புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நடிகர் வடிவேலு: உதயநிதி ட்விட்
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடிகர் வடிவேலு முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.
நடிகர் வடிவேலு
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல திரைக்கலைஞர்கள் பொருளாதார உதவிகள் செய்ய முன் வந்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர்கள் சூரி, விஷ்ணு விஷால் என பலரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்துள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது, நடிகர் வடிவேலு முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். இதனைப் பாராட்டி உதயநிதி ஸ்டாலின் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று… pic.twitter.com/yDYv9GvrZL
— Udhay (@Udhaystalin) December 15, 2023
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ''மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்'' எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |