5 வருடம் என்ன செய்தார்கள்.., யோசித்து ஓட்டுப் போடுங்கள்- நடிகர் விஜய் ஆண்டனி
கோவையில் நேற்று பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி தனது ரசிகர்களுக்கு ஆலோசனை கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி
40 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனி "நான்" திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இசையமைப்பாளர், நடிகர் என பலமுகங்களை கொண்ட விஜய் ஆண்டனியின் நடிப்பில் "ரோமியோ" படம் வெளியாக இருக்கிறது.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வரவிருக்கும் "ரோமியோ" படத்திற்காக கோவையில் நேற்று பட நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் படம் குறித்தும் அரசியல் குறித்தும் பல விடயங்களை கூறினார்.
அவர் கூறியதாவது..,
"நிச்சயம் நீங்கள் ஓட்டுப் போட வேண்டும். நோட்டாவுக்கு போடுவதை விட, யாருக்காவது ஓட்டு போடுங்கள். அதை வேஸ்ட் செய்யாதீர்கள்.
பிடித்தவர்களுக்குப் போடுவதை விட, இந்த 5 வருடத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என 5 நிமிடம் யோசித்து ஓட்டுப் போடுங்கள்” என்றார்.
அப்போது அவரிடம் 'நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. "நான் வரவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் வரலாம். மற்றபடி எந்த ஐடியாவும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
மேலும், நான் இனிமேல் எத்தனை படங்கள் எடுத்தாலும் அது "பிச்சைக்காரன்" போல வருமா எனத் தெரியவில்லை. அதற்கு இணையாக "ரோமியோ" நிச்சயம் இருக்கும். அந்தப் படத்தில் அம்மா சென்டிமென்ட் போல, இதில் மனைவி.
இப்போதெல்லாம் நல்ல படங்கள் ஓடுவதற்கு சமூகவலைதளங்களே போதும். உதாரணத்திற்கு "மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தைச் சொல்லலாம். அந்தப் படத்திற்கு இங்கு பிரஸ் மீட், புரோமோஷன் என எதுவும் செய்யவில்லை. ஆனால், மக்கள் அதைக் கொண்டாடினார்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |