தமிழக அரசுக்கு நடிகர் விஜய் சேதுபதி வைத்த கோரிக்கை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ரா.நல்லக்கண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை வைத்துள்ளார்.
விஜய் சேதுபதி பேசியது
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ரா.நல்லக்கண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழாவானது கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லக்கண்ணுவுக்கு சால்வை அணிவித்தார். பின்னர், கவிதை நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அதோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும்.
காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை போன்றவற்றை எல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் நமக்கு ரத்தம் சிந்தி பெற்று கொடுத்தது. இதனை பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவர். அதேபோல, இதனால் பலனடைந்தவர்களில் நானும் ஒருவர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |