5 ரூபாய் கூட உதவி தான்.., ஏன் பிச்சைன்னு சொல்லணும்? குஷ்பு பேச்சுக்கு நடிகை அம்பிகா விமர்சனம்
தமிழக அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக குஷ்பு பேசிய கருத்துக்கு நடிகை அம்பிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.1000 மகளிர் உரிமை தொகை
நடிகையும், தேசிய மகளிர் உறுப்பினருமான குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில், "பெண்களுக்கு ரூ.1000 ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா? தமிழ்நாட்டில் 3500 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் திமுகவின் ஆள் தானே? அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார்" என பேசியிருந்தார்.
இவர் பேசிய கருத்து தான் தற்போது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஷ்புவின் உருவ பொம்மைகளை எரித்து திமுகவைச் சேர்ந்த மகளிர் போராட்டம் நடத்தினர்.
அம்பிகா கண்டனம்
குஷ்பு பேசிய கருத்துக்கு நடிகை அம்பிகா தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "எதுவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் ஏதாவது ஒரு உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ ஏற்றுக்கொண்டு பாராட்டுங்கள். ஏன் பிச்சை என்று சொல்லணும். 5 ரூபாய் கூட உதவியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று, பெண்களுக்கு நீங்கள் ரூ.1000 கொடுப்பதை விட டாஸ்மாக்கை மூடினால் பல ஆயிரம் சேமித்து குடும்பத்தை நடத்துவார்கள். இதை தான் நான் கூறினேன் என்று நடிகை குஷ்பு விளக்கம் அளித்திருந்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |