உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் சடங்கில் பங்கேற்ற நடிகை மரணம்
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்காக செய்யப்படும் சடங்கில் பங்கேற்ற மெக்சிகோ நாட்டவரான நடிகை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் சடங்கு
தென் அமெரிக்காவில், உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்காக Kambo என்னும் சடங்கொன்று நடத்தப்படுகிறது.
இந்த சடங்கில் பங்கேற்போருக்கு, உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்காக அதிக அளவில் தண்ணீர் கொடுக்கப்படும். பின்னர், தோலில் சிறு கொப்புளங்களை உருவாக்கி, அதன் மீது தவளை ஒன்றின் விஷம் தடவப்படும்.
அந்த விஷம் உடலுக்குள் சென்றதும், வாந்தி ஏற்படும். ஆக, தொடர்ந்து வாந்தி எடுக்கும்போது, உடலிலுள்ள நச்சுக்கள் எல்லாம் வெளியேறிவிடும் என்ற நம்பிக்கை தென் அமெரிக்காவில் சில பகுதிகளில் காணப்படுகிறது.
சடங்கில் பங்கேற்ற நடிகை மரணம்
மார்செலா (Marcela Alcázar Rodríguez, 33) என்னும் மெக்சிகோ நாட்டவரான நடிகை ஒருவர் இந்த சடங்கில் பங்கேற்றுள்ளார்.
அவருக்கு கடுமையான வாந்தியுடன் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மார்செலா தன்னை அனுப்பிவிடுமாறு அந்த சடங்கை நடத்தும் மத குருவிடம் கேட்டுள்ளார்.
ஆனால், அந்த மதகுரு அவருக்கு அனுமதியளிக்கவில்லையாம். பின்னர் மார்செலாவின் நிலைமை மோசமாவதை உணர்ந்த அந்த மதகுரு தப்பியோடியுள்ளார்.
அதைத் தொடர்ந்து மார்செலா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
தலைமறைவான அந்த மதகுருவை பொலிசார் தேடிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |