தேர்தல் முடிவுகளை நம்பமுடியாது என்றவர்கள் இப்பொழுது அந்தர்பல்டி: நடிகை கஸ்தூரி கிண்டல்
EVM எந்திரங்கள் குறித்து விமர்சித்தவர்கள் எல்லாம் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என நடிகை கஸ்தூரி கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக EVM வாக்கு எந்திரங்கள் குறித்து விமர்சனங்கள், எதிர்மறை கருத்துக்கள் நிலவின.
இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணி அநேக இடங்களில் முன்னிலை பெற்று வருவதை குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி கிண்டலாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், ''திடீரென தற்போது அனைவரும் EVMகள் குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது வெறும் I.N.D.I.A விடயங்கள். நேற்று வரை EVM இயந்திரங்கள் உள்ளவரை தேர்தல் முடிவுகளை நம்ப முடியாது என்று சொல்லி திரிந்தவர்கள் எல்லோரும் இப்பொழுது அந்தர்பல்டி'' என கூறியுள்ளார்.
Suddenly now everybody is happy about EVMs. :)) Just I.N.D.I.A things ...
— Kasturi (@KasthuriShankar) June 4, 2024
நேற்று வரை EVM இயந்திரங்கள் உள்ளவரை தேர்தல் முடிவுகளை நம்பமுடியாது என்று சொல்லி திரிந்தவர்கள் எல்லோரும் இப்பொழுது அந்தர்பல்டி:)). #2024loksabha

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |