சரியான புரிதலில்லாமல் அவசரப்பட்டு அறிக்கை.., நடிகர் விஜயை விமர்சித்த கஸ்தூரி
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சரியான புரிதலில்லாமல் அவசரப்பட்டு அறிக்கை விடுவது சரியல்ல என்று நடிகர் கஸ்தூரி நடிகர் விஜயை விமர்சனம் செய்துள்ளார்.
அறிக்கை வெளியிட்ட விஜய்
இந்தியா முழுவதும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமுல்படுத்தப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததையடுத்து, CAA சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் எதிர்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உட்பட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
நடிகை கஸ்தூரி விமர்சனம்
இந்நிலையில் த.வெ.க தலைவர் விஜயின் அறிக்கை குறித்து நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "விஜய் தன் அரசியல் ஆலோசகர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
CAA என்பது இஸ்லாமிய அண்டை நாட்டு மதவாதத்திலிருந்து தப்பி வந்தவர்களுக்கு புகலிடம் தரும் மனிதநேய சட்டம். சரியான புரிதலில்லாமல் அவசரப்பட்டு அறிக்கை விடுவது சரியல்ல" என்று கூறியுள்ளார்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |