வாட்சப்பில் நடிகைக்கு தொல்லை அளித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தனக்கு வாட்சப்பில் தொல்லை அளித்ததாக நடிகை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நடிகைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தொல்லை
32 வயதான நேஹல் வடோலியா(Nehal Vadoliya), Taarak Mehta Ka Ooltah Chashmah உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில், உங்களுக்கு எப்போதாவது கிரிக்கெட் வீரரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "நான் அவரின் பெயரை சொல்லட்டுமா? ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த அவர் அவ்வளவு பிரபலமானவர் இல்லை. அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டது" என தெரிவித்துள்ளார்.

என்ன மாதிரியான செய்திகளை அனுப்புவார் என கேட்கப்பட்டதற்கு, "நான் வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் போதெல்லாம், ப்ரீட்டி, பியூட்டிஃபுல் என அனுப்பிக்கொண்டிருப்பார். நான் அவரிடம் பேச விரும்பவில்லை அதனால் அவரை பிளாக் செய்து விட்டேன்" என கூறினார்.
அவர் பேசிய வீடியோ வைரல் ஆன நிலையில், யார் அந்த வீரர் என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
முன்னதாக குஜராத்தி நடிகர் கரண் ஜோஷி இன்ஸ்டாகிராமில் தனக்கு தகாத செய்திகளை அனுப்பியதாக அவர்களின் உரையாடலைக் காட்டுவதாகக் கூறிய ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார்.
Taarak Mehta fame actress & model Nehal Vadoliya revealed that a divorced Rajasthan Royals cricketer allegedly used to frequently DM her, calling her "hot", "beautiful" and "pretty"
— Amit Kumar Sindhi (@AMIT_GUJJU) May 30, 2026
She says she eventually got fed up and blocked him.
Who do you think that RR cricketer is? 👀 pic.twitter.com/Ri15jiRYna
ஜோஷி முதலில் அந்தச் செய்திகளுக்கு தனது நண்பர் மீது பழி சுமத்திவிட்டு, பின்னர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகக் கூறினார் என நேஹல் தெரிவித்தார்.
மேலும், அவருடன் தொடர்புடைய சிலர் தனது பதிவுகளை நீக்குமாறும், அமைதியாக இருக்குமாறும் தன்னை வற்புறுத்தியதாகவும் நேஹல் குற்றம் சாட்டினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |