தவெக தலைவர் விஜய் அப்படி இருக்கக்கூடாது: நடிகை ரோஜா
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மாதிரி தவெக தலைவர் விஜய் இருக்க வேண்டும் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கும் பிரபல தமிழ் நடிகர் விஜய், சமீபத்திய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
குறிப்பாக, திமுக அரசு என குறிப்பிட்டு தமிழக மீனவர்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தெலங்கானாவின் மாநில மந்திரியாக இருந்த நடிகை ரோஜா, நிகழ்ச்சி ஒன்றில் விஜய் குறித்து பேசியிருக்கிறார்.
நடுரோட்டில் நிற்கிறார்கள்
அவர் பேசுகையில், "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வரும்போது நல்ல எண்ணத்தோடு வரவேண்டும். ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி தொடங்கி, அதன்பின் திடீரென அதைக் கொண்டுபோய் காங்கிரசில் இணைத்துவிட்டார். அவரை நம்பி வந்தவர்கள் இப்போது நடுரோட்டில் நிற்கிறார்கள்.
இப்போது விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மாதிரி இருக்க வேண்டும். சினிமாவில் இருந்து வந்த அவர்களை இப்போதும் நாம் பேசி கொண்டாடுகிறோம்.
தற்போது சினிமாவில் இருந்து வருபவர்கள் 'Timepass' அரசியலுக்காக வருகிறார்கள். விஜய் அப்படி இருக்கக்கூடாது. தனக்கு பின்னால் வரும் மக்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி போராட வேண்டும். தொண்டர்களை பாதியில் விட்டுவிடக்கூடாது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |