253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம்
கவுன்டி டெஸ்ட் தொடரில் வொர்செஸ்டர்ஷயர் அணி 679 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
வொர்செஸ்டர்ஷயர் 679 ஓட்டங்கள்
கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஸன் ஒன் டெஸ்ட் போட்டியில் வொர்செஸ்டர்ஷயர் (Worcestershire) மற்றும் ஹாம்ப்ஷயர் (Hampshire) அணிகள் விளையாடி வருகின்றன.
முதல் இன்னிங்சை ஆடிய வொர்செஸ்டர்ஷயர் அணி 7 விக்கெட்டுக்கு 679 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதிரடியில் மிரட்டிய ஆடம் ஹோஸ் (Adam Hose) 253 பந்துகளில் 7 சிக்ஸர், 31 பவுண்டரிகளுடன் 266 ஓட்டங்கள் விளாசினார்.
லிப்பி 228
இதன்மூலம் ஆடம் ஹோஸ் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக 4வது வரிசையில் களமிறங்கி, அதிக ஓட்டங்கள் (266) விளாசிய வீரர் எனும் பெருமையை பெற்றார்.
அணித்தலைவர் ஜேக் லிப்பி (Jake Libby) ஆட்டமிழக்காமல் 228 (438) ஓட்டங்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் ரோடெரிக் 80 ஓட்டங்கள் எடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |