RCB அணியை வாங்கபோவது யார்? போட்டியில் இணைந்த அதானி
RCB அணியை வாங்க அதானி உள்ளிட்ட 6 பேர் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விற்பனைக்கு வரும் RCB
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், 18 வருடங்களில் முதல்முறையாக RCB அணி 2025 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றது.
அதிக ரசிகர்களை கொண்ட ஐபிஎல் அணிகளில் ஒன்றாக RCB அணி உள்ளது. தற்போது RCB அணியின் சந்தை மதிப்பு 2 பில்லியன் டொலராக உள்ளது.
லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம், தற்போது RCB அணியின் உரிமையாளராக உள்ளது.
இந்த நிறுவனம் RCB அணியை விற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விற்பனையை Citi மற்றும் பிற ஆலோசகர்கள் நிர்வகிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
வாங்க போவது யார்?
இதனைதொடர்ந்து, புனேவை தளமாக கொண்டு இயங்கி வரும் Serum institute நிறுவனத்தின் நிறுவன CEO அதார் பூனாவாலா RCB அணியை வாங்க பேச்சுவார்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
2010 ஆம் ஆண்டில், ஐபிஎல் அணிகள் 8 இல் இருந்து 10 ஆக விரிவாக்கம் செய்யப்பட்ட போதே, அதார் பூனாவாலா ஐபிஎல் அணி ஒன்றை வாங்க ஆர்வம் காட்டினார்.
அவரை தொடர்ந்து மேலும் சிலரும் ஆர்சிபி அணியை வாங்குவதற்கான போட்டியில் இணைந்துள்ளனர்.
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்தில் உள்ள அதானி குழும தலைவர் கௌதம் அதானியும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
அதானி குழுமம், 2022 ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்க ஏலத்தில் பங்குபெற்றது. மேலும் ILT20 தொடரில் Gulf Gaints என்ற அணியையும், மகளிர் பிரீமியர் லீக்கில்(WPL) குஜராத் ஜெயண்ட்ஸ் என்ற அணியையும் வைத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளரான JSW குழும தலைவர் பார்த் ஜிண்டாலும் RCB அணியை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார். RCB அணியை பார்த் ஜிண்டால் வாங்குவதாக இருந்தால், அவரின் 50% டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பங்கை விற்க வேண்டிய நிலை வரும்.
மேலும், 2 அமெரிக்கா தனியார் பங்கு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |