அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் நியமனம்! ஆத்திரத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பரபரப்புக்கு மத்தியில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்வது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Chennai, Tamil Nadu | AIADMK General Council Meeting presided by E Palaniswami underway at party office in Vanagaram; 16 resolutions are expected to be passed here pic.twitter.com/mE8YKYOlj5
— ANI (@ANI) July 11, 2022
அதிமுகவில் முதன்முறையாக துணைப் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பது. அதிமுக பொருளாளருமான அதிகாரரங்கள் அனைத்தையும் பொதுச்செயலாளருக்கு வழங்கி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சமாளிக்கும் நோக்கத்துடன் அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு பொதுச்செயலாளர் சேர்தலுக்கான வீதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க தீர்மானம்; தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஒபிஎஸ் வந்தார். ஜெயலலிதா நின்ற அதே இடத்தில் அதிமுக கொடியுடன் தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார். அங்கு வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் பேனர்களை கிழித்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, இதோடு இபிஎஸ் புகைப்படத்தை செருப்பாலும் அடித்தனர்.
#WATCH | O Paneerselvam supporters slap slippers at E Palaniswami's photo as they protest AIADMK's General Council meeting in Vanagaram, Chennai pic.twitter.com/1bLqtnT7To
— ANI (@ANI) July 11, 2022