மூன்று முறை கர்ப்பமானேன்! அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தமிழ் நடிகை தந்த புகாரில் திடீர் திருப்பம்
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மூலம் மூன்று முறை கர்ப்பமானதாக கூறிய நடிகை திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளதன் காரணம் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருக்கமாக இருந்துவிட்டு பல முறை கருக்கலைப்பு செய்ததாக துணை நடிகை சாந்தினி தேவா கொடுத்த புகாரை அவர் திரும்ப பெற்றுவிட்டதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
அதிமுகவின் முன்னாள் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் மணிகண்டன். இந்நிலையில், அமைச்சர் மணிகண்டன் கடந்த 5 வருடங்களாக குடும்பம் நடத்திவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி தேவா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவரை நம்பிய நான் தாலி கட்டிகொல்லாமல் அவரது பங்களாவில் அவருடன் நெருக்கமாக இருந்து வந்தேன்.
அதனால் நான் கர்ப்பம் அடைந்து 3 முறை சென்னையில் அவருக்கு தெரிந்த மருத்துவரின் கிளினிக்கில் மணிகண்டனின் மிரட்டலுக்கு பயந்து கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார். பின்னர் அமைச்சர் பதவியை அவரிடம் இருந்து பறித்த பின்பு என்னிடம் தகராறு செய்து அடிக்கவும் ஆரம்பித்தார்.
மேலும், என்னை திருமணம் செய்துகொள்ளவும் மறுத்துவிட்டார். என் உடல் முழுவதும் அவரால் நிறைய காயங்கள் உள்ளன என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. நடிகை சாந்தினி சார்பில் மணிகண்டன் மீதான புகாரை திரும்பபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, தன் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் புகார் அளித்தால் என்னவாகும்? என கண்டனம் தெரிவித்து மணிகண்டன் மீது சாந்தினி தேவா தொடுத்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.