பாஜக தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகி பங்கேற்பு - கட்சியில் இருந்து நீக்கம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகி கலந்து கொண்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
அண்ணாமலை நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 39வது பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில், 39 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இந்த விழாவிற்கு அண்ணாமலை தலைமை தங்கி தாலிகளை எடுத்துக் கொடுத்தார்.
இந்த திருமண ஏற்பாடுகளை அ.தி.மு.க-வில் விழுப்புரம் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளராக இருக்கும் முரளியின் மகன் ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார்.
இவர் பாஜகவின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளராக இருக்கிறார். தனது மகனுடன் சேர்ந்து முரளியும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
கட்சியில் இருந்து நீக்கம்
இந்நிலையில், அதிமுகவின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாட்டிற்கும் முரணாகச் செயல்பட்டதாக கூறி, விழுப்புரம் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த முரளி என்ற ரகுராமன், அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |