தேனி தொகுதி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தேனி மக்களவை தொகுதி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேனி மக்களவை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவர், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை மறைத்துள்ளார். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓ.பி.ஆர் வெற்றி பெற்றுள்ளார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவில், தேனி மக்களவை தொகுதி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |