தோனி சார் ரொம்ப நன்றி! நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ஆப்கான் வீரர்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தனக்கு அளித்த டி-சர்ட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆப்கான் இளம் வீரர்
ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடியவர் ரஹ்மனுல்லா குர்பாஸ்.
ஆப்கானிஸ்தான் அணியின் 21 வயது இளம் வீரரான இவர், 41 டி20 போட்டிகளிலும், 18 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
Twitter
தோனிக்கு நன்றி
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் பெயர் பொறித்த CSK அணியின் டி-சர்ட் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் 'இந்தியாவில் இருந்து இந்த பரிசை அனுப்பியதற்கு தோனி சாருக்கு நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.
Thanks @msdhoni sir for sending the gift all the way from india ❤️ pic.twitter.com/EaWtwz7CnY
— Rahmanullah Gurbaz (@RGurbaz_21) June 20, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |