என்னால் தூங்க முடியவில்லை! பயமாக இருக்கு... தாலிபான்கள் பெண்களை... ஆப்கானை சேர்ந்த 29 வயதான இளம் பெண் விமானி பீதி
ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானியான 29 வயது நிலோபர் ரஹுமானி தாலிபான்கள் தொடர்பில் சில முக்கிய விடயங்களை பேசியுள்ளார்.
நிலோபர் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு தப்பி சென்றிருக்கிறார். ஏனெனில் ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானியானதே அதற்கு காரணமாக இருந்துள்ளது.
அவர் கூறுகையில், என் குடும்பம் மற்றும் பெற்றோர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். நான் விமானி ஆவதற்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அவர்கள் கொடுத்தனர்.
இதன் காரணமாக தாலிபான்கள் அவர்களை குறிவைத்துள்ளனர். என் குடும்பத்தார் இன்னும் ஆப்கானில் தான் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் நடந்த விடயங்களை அறிந்த பிறகு என்னால் தூங்க முடியவில்லை. என் மனதை ஒன்றிணைக்க முடியவில்லை, அவர்களின் பாதுகாப்பிற்காக நான் மிகவும் பயப்படுகிறேன்.
தாலிபான்கள் பெண்களை அதிகம் காயப்படுத்தி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவார்கள். அவர்கள் பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பு கொடுப்போம் என கூறியுள்ளனர், ஆனால் அதை அவர்கள் நிறைவேற்றுவது சந்தேகமே.
ஒரு விமானியாகவும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான குரலாகவும் இருக்க பெருமைப்படுகிறேன்.
தற்போதைய சூழ்நிலையிலிருந்து ஆப்கானிஸ்தான் பெண்களை யாராவது காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.