ஆப்கானில் தாலிபான்கள் முகத்தை பார்த்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கதி! கனவிலும் நினைக்க முடியாத ஒரு கொடூரம்... மனதை கலங்கடிக்கும் வீடியோ
ஆப்கானிஸ்தானை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணின் கண்களை குருடாக்கி அவரை கொடூரமாக தாலிபான்கள் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானி கஸ்னி நகரை சேர்ந்தவர் கட்டீரா ஹஸ்மி (32). காவல்துறையில் வேலை செய்து வந்த இவர் கடந்தாண்டு நவம்பரில் கண்பார்வையை இழந்த நிலையில் இந்தியாவுக்கு வந்துவிட்டார்.
தற்போது டெல்லியில் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். ஹஸ்மி கண் பார்வையை இழந்தது என்பது மிக கொடூரமான கதையாக உள்ளது.
அவர் கூறுகையில், நான் ஆப்கானில் காவல்துறையில் பணியாற்றி வந்தேன். எனக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில் கடந்தாண்டு ஜூன் மாதம் 3 மாத கர்ப்பிணியாக இருந்தேன்.
அப்போது தாலிபான்களின் முகத்தை நான் பார்த்துவிட்டதாக கூறி தலை பகுதி, மார்பு பகுதி, கழுத்து பகுதியில் கடுமையாக தாக்கினார்கள். இதோடு அவர்களை பார்த்த ஆத்திரத்தில் என் கண்களை எடுத்து விட்டார்கள்.
என் தந்தையும் தாலிப் தான், நான் காவல்துறையில் வேலை செய்வது அவருக்கு பிடிக்கவில்லை, அவர் தான் மற்ற தாலிபான்களை தூண்டி இப்படியான கொடூரத்தை எனக்கு செய்ய வைத்தார் என கருதுகிறேன்.
இதன் பின்னர் ஆப்கானில் சரியான சிகிச்சை பெற முடியாததால் இந்தியாவிற்கு என் கணவருடன் வந்தேன். இங்கு தான் எனக்கு குழந்தை பிறந்தது.
எனக்கு உடலில் பல இடங்களில் துப்பாக்கி குண்டு காயம் உள்ளதோடு சில பிரச்சினைகளும் உள்ளது, இதனால் எனக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்காது என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
என் பிள்ளைகள் தற்போது பயத்தோடு ஆப்கானில் வசித்து வருகிறார்கள். என்னுடைய தாயாரும், சகோதரியும் தான் அவர்களை கவனித்து கொள்கிறார்கள்.
அம்மா வேண்டும் என அவர்கள் தினமும் அழுகின்றனர், ஒன்று நான் அங்கு அவர்களிடம் செல்ல வேண்டும் அல்லது அவர்கள் என்னிடம் வர வேண்டும்.
பொலிஸ் பணியில் இருந்ததால் எனக்கு நஷ்ட ஈடாக 13,000 AFN வந்து கொண்டிருந்தது, ஆனால் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பிறகு எனக்கு பணம் வரவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.