ஆப்கானில் பிரபல பாடகரை வீட்டிலிருந்து தரதரவென வெளியே இழுத்து வந்து தலையில் சுட்டு கொன்ற தாலிபான்கள்! பதைபதைக்கும் சம்பவம்... வீடியோ காட்சி
ஆப்கானிஸ்தானில் பிரபல பாடகரை வீட்டில் இருந்து வெளியே தரதரவென இழுத்து வந்து தாலிபான்கள் சுட்டு கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நாட்டுப்புற பாடகர் ஃபவாத் அந்தராபி கொல்லப்பட்டுள்ளார்.
இவர் நேற்று தனது வீட்டில் இருந்த போது, அங்கு வந்த தாலிபான்கள் அவரை வீட்டிற்குள் இருந்து வெளியே இழுத்து போட்டு தலையில் சுட்டுக் கொன்றனர். இதனை அவரது மகன் உறுதி செய்தார். முன்னர் தாலிபான்கள் அந்தராபியுடன் சேர்ந்து தேனீர் அருந்தியுள்ளனர் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பேசிய தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்படும்.
#AFG “Fawad Andarabi a local singer was shot dead by Taliban in Kishaan village in Andarab district in Baghlan province.” Multiple residents from Anadarab tells me. pic.twitter.com/6UWKrRWanw
— BILAL SARWARY (@bsarwary) August 28, 2021
கொலை தொடர்பாக தற்போது வேறு விபரங்கள் தெரியவில்லை என கூறினார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன், தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக, முன்னர் வெளியான தகவலில், இஸ்லாத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், இசைக்கு தடை செய்யப்படுகிறது என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.