தாய் நாட்டை விட்டு வெளியேறிய துயரத்தை மறந்து அமெரிக்காவில் ஆப்கானியர்கள் செய்த செயல்! வைரலாகும் வீடியோ
அமெரிக்க இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானியர்கள் கை தட்டி பாட்டு பாடி நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 15ம் தேதி ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதை அடுத்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
மேலும், நாட்டில் உள்ள வெளிநாட்டு படைகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தவிட்டுள்ளனர்.
தலிபான்கள் ஆட்சியின் கீழ் வாழ விரும்பாத ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள், நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.
கடந்த சில நாட்களில் காபூல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு, கூட்ட நெரிசல், தற்கொலை தாக்குதல் மற்றும் ராக்கெட் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே தலிபான் அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் வெளிநாட்டு படைகள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டன.
Music & Dance: Afghan asylum seekers trying to forget Kabul’s grief at a U.S. military camp pic.twitter.com/ODyRNJyIfG
— Muslim Shirzad (@MuslimShirzad) August 31, 2021
இந்நிலையில், தாய் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்க இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆப்கான் புகலிடம் கோருவோர், துயரத்தை மறந்து பாடலுக்கு நடனமாடி கை தட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வீடியோவில், பின்னணியில் பாடல் ஒலிக்க இளைஞர் ஒருவர் நடனமாடுகிறார், சுற்றியிருப்பவர்கள் கை தட்டி கூச்சலிட்டு அதை கொண்டாடுவதை காட்டுகிறது.