அரசாங்கம் எங்களை விற்று விட்டது! தலிபான்களிடம் சிக்கி தவிக்கும் பெண்கள் குறித்து அங்குள்ள தடகள வீராங்கனை தைரியமாக வெளியிட்ட வீடியோ
தலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் நிலை குறித்து விவரித்து அங்குள்ள தடகள வீராங்கனை ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் பேசிய ஆப்கான் தடகளட வீராங்கனை மார்சியா, தாய் நாட்டை விட்டு வெளியேற மறுத்த ஆப்கான் பெண்களில் நானும் ஒருவர்.
நான் என் மக்களுடன் வாழ விரும்புகிறேன். தற்போது தலிபான் அதிகாரத்தில் உள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது.
பெண்கள் உரிமையை குழித்தோண்டி புதைக்கக்கூடாது என ஐ.நா உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளிடம் ஆப்கான் பெண்களாகிய நாங்கள் கோருறோம்.
ஏனெனில் வரலாற்று ரீதியாக எல்லா காலங்களிலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான் ஒரு பெண் தடகள வீராங்கனை, தடகள வீராங்களையாக நான் பயிற்சியில் ஈடுபடுவேன். இனி நான் பயிற்சி செய்ய தலிபான்கள் தடை விதிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
என்னால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை கூட ஏற்படும்.
பெண் உரிமைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே ஆப்கான் பெண்களாகிய எங்களின் தேவை.
பெண்கள் கல்வி பயில, சுதந்திரமாக இருக்க, சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்க, சுவாசிக்க என இவை அனைத்தும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பெண்களின் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது, இந்த ஒட்டுமொத்த உலகமும் எப்பொழுதும் எங்களை மறுத்துள்ளது.
மக்களின் ஒப்பதல் இல்லாமல் அரசாங்கம் எங்களை தலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டது. எங்கள் அரசாங்கம் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது, எங்களை விற்று விட்டது.
با صدها زن در افغانستان از طریق کمپین ضد حجاب اجباری آشنا بودم اما اینبار ویدیوهایی که می فرستند صدایشان را در اعتراض به حضور طالبان بلند کردند بشنویم و تکثیر صدای آنان باشیم. در جنگ با جمهوری اسلامی و طالبان ما زنان ایران و افغانستان متحد هستیم pic.twitter.com/7DcIHxqU67
— Masih Alinejad ?️ (@AlinejadMasih) August 19, 2021
ஒட்டுமொத்த உலகமும் கேட்கும் வரை தொடர்ந்து நாங்கள் குரல் கொடுப்போம்.
இங்கு பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது. ஆப்கான் பெண்களின் விதி குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என மார்சியா நிலைமையை விவரித்துள்ளார்.