கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம்
பெங்களூருவைச் சேர்ந்த மேகனா ஸ்ரீனிவாஸ், தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
சமீபத்தில், அவர் Mississauga-விலிருந்து Toronto-விற்கு பயணிக்கும்போது, டாக்சி ஓட்டுநராக பணியாற்றும் ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டு வைத்தியரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வைத்தியர், முன்னதாக அமெரிக்கா மற்றும் கனடா இராணுவத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றியவர்.
தற்போது கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர். தனது மருத்துவ உரிமத்தை புதுப்பிக்க கல்வி பயின்று கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், வாழ்வை நடத்த டாக்சி ஒட்டி வருமானம் ஈட்டுகிறார். அவர் மாதம் 4,000 கனேடிய டொலர் சம்பாதிக்கிறார்.
ஆனால், Toronto-வில் ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கே 3000 டொலர் செலவாகிறது.
கனடாவில் ரியல் எஸ்டேட் துறையில் பணியாற்றும் மேகனா, வெளிநாட்டுக்கு குடியேற விரும்பும் இந்தியர்கள், கனடாவின் வாழ்க்கை சூழ்நிலையை நன்கு ஆராய்ந்து, திட்டமிட்டு வரவேண்டும் என அறிவுறுத்துகிறார்.
"கனடா வாய்ப்புகள் நிறைந்த நாடு. அனால், இங்கு வெற்றி பெற திட்டமிடல், தகுந்த திறன்கள், பொறுமை ஆகியவை அவசியம்" என அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பலரும் இந்த வீடியோவுக்கு பதிலளித்து, "35 வயதுக்கு மேல் உள்ளவர்கள், குறிப்பாக இந்தியாவில் மருத்துவராக இருப்பவர்கள், கனடாவுக்கு குடியேற வேண்டாம்" என எச்சரிக்கின்றனர்.
"மருத்துவ துறையில் வேலை பெறுவது மிகவும் கடினம்" என்றும் "உங்கள் திறனுக்கு ஏற்ப வேலை கிடைப்பது பல ஆண்டுகள் ஆகும்" என்றும் கருத்துக்கள் பதிவாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Afghan doctor cab driver Canada, Canada immigrant doctor struggles, Bengaluru woman viral video Canada, Canada cost of living for immigrants, PR doctor driving Uber in Toronto, Meghana Srinivas Canada cab story, Canada medical license process, Foreign doctors in Canada 2025, Toronto condo rent, Immigrant life in Canada challenges