ஆப்கானிஸ்தானை விட்டு தப்ப முயன்ற விமானம் உஸ்பெகிஸ்தானில் விழுந்து விபத்து!
உஸ்பெகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கான் எல்லைக்கு அருகே உள்ள உஸ்பெகிஸ்தானின் Surxondaryo பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் விமானி பாராசூட் மூலம் அதிலிருந்த வெளியேறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இருவர், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் பயணித்தவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்ப முயன்ற போது, எரிபொருள் இல்லாமல் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
According to the Uzbek Gazeta uz, a plane (possibly A-29) with Afghan markings crashed in the Surkhandarya region of Uzbekistan near the border with AFG overnight. The 2x crew parachuted safely & were taken to a hospital. @RALee85 pic.twitter.com/INthcggn2V
— Begonavsky?? (@begonavsky) August 16, 2021
எனினும், விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் மற்றும் விபத்திற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
TW// injuries
— Daily Scoop TV (@DailyScoopTV1) August 16, 2021
Uzbekistan's military says Afghanistan Air Force plane crashed near border
An Afghan military aircraft has crashed in the Surxondaryo Region of Uzbekistan. pic.twitter.com/AhAFG7h0I2
அதேசமயம், மீட்கப்பட்ட வீரர் ஒருவருக்கு சம்பவயிடத்தில் வைத்து உஸ்பெகிஸ்தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.