ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் இந்தியர் கடத்தல்! தாலிபான்களின் வேலையா? வெளியான புகைப்படம்
ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இந்திய நபரை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இந்தியர் பன்ஸ்ரீ லால் அரன்தே (Bansri Lal Arendeh).
தகவல்களின்படி, டெல்லி என்சிஆர் பிராந்தியத்தின் ஃபரிதாபாத்தில் வசிக்கும் 50 வயதாகும் பன்ஸ்ரீ லால், கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் மருந்து தயாரிப்புகளை வியாபாரம் செய்யும் ஒரு தொழிலதிபர் ஆவார்.
இவரது குடும்பத்தினர் இந்தியாவில் டில்லியில் உள்ளனர்.
பன்ஸ்ரீ லால் செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில், கடையில், ஊழியருடன் இணைந்து வழக்கமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, கடைக்கு வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் இருவரையும் கடத்திச் சென்றனர்.
ஆனால், கடை ஊழியர் அவர்களிடம் இருந்து தப்பி வந்தார். இருவரையும், கடத்தல்காரர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் தாலிபான்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ளூர் விசாரணை அமைப்பினர், இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.