எங்களின் உள் விவகாரத்தில் தலையிடாதே... காபூலில் பிரபல அண்டை நாட்டிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஆப்கானியர்கள்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தானுக்கு எதிராக நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன் இந்த போராட்டம் தொடங்கியது.
ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவரை நிறுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இந்த போராட்டத்தை பெண்கள் முன்நின்று நடத்தினர். இந்த போராட்டத்தை சில ஊகடவியலாளர்கள் படம்பிடிப்பதை தலிபான் போராளிகள் தடுத்தனர்.
பாகிஸ்தான் உள்நாட்டு புலனாய்வுத்துறை (ISI) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் காபூலுக்கு வருகை தந்ததை தொடர்ந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஏன் ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் வெட்ட வெளிச்சமாக தலையிடுகிறது? 6 நாட்களாக பாகிஸ்தாக் ISI தலைவர் ஏன் எங்கள் நாட்டில் இருக்கிறார்? என போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Thousands of people took to the streets to protest against Taliban and Pakistan. “This is Kabul. Men and women, we are on the street, chanting against Pakistan and Taliban and support Resistance of Panjsger”, one of protesters says. pic.twitter.com/bMyNpsu1k2
— Zahra Rahimi (@ZahraSRahimi) September 7, 2021
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நாள் முதல், தங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க கோரி நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்கள் ஆட்சியில் பெண் வேலை செய்யலாம், ஆனால், முக்கிய பொறுப்புகளில் பணியாற்ற முடியாது என தலிபான்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.