மொத்த மக்கள் தொகையில் 19 லட்சம் பஞ்சத்தில் சாகும் நிலை: தாலிபான்களின் நாட்டில் பரிதாபம்
போர் மற்றும் தந்திரத்தால் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் தற்போது கடுமையான நிதி நெருக்கடியால் செய்வதறியாது தடுமாறி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றிய நிலையில், தற்போது ஆட்சிக்கும் வந்துள்ளனர். ஆனால், மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானிக்கு வழங்கி வந்த பொருளாதார உதவிகளை ஜேர்மனி, பிரித்தானியா உட்பட பல நாடுகள் முடக்கி வைத்துள்ளன.
இந்த நிலையில், தங்கள் ஆட்சியை ஆதரிக்க வேண்டும் எனவும், இல்லையே அதற்கான விலையை அளிக்க நேரிடும் எனவும் தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் கட்டார், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தாலிபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, தாலிபான்களின் ஆட்சியை ரஷ்யா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.
அதனால் மட்டும், உலக நாடுகள் சபையும் ஜேர்மனி, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார உதவிகளை அளிக்கும் ஒருமித்த கருத்துக்கு எட்டவில்லை.
தற்போது மொத்தமுள்ள மக்கள் தொகையில் 19 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் சிக்கும் அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிரித்தானியாவில் குடிபெயர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள், தங்கள் குடும்பங்களை பஞ்சத்தில் இருந்து மீட்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால் அது ஒரு மனிதப் பேரழிவாகவோ, கடுமையான நெருக்கடி நிலையாகவோ இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. தற்போதுள்ள இறுக்கமான நிலை காரணமாக, உணவுப்பொருட்களுக்கு உச்சம் தொடும் விலை என்பதுடன், பொதுமக்களிடம் பணம் இல்லை என்பதே கொடூரமான உண்மை என ஆப்கானிய இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், சுமார் 19 மில்லியன் மக்கள், இந்த குளிர்காலத்தில் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.
மேலும், ஆப்கானிஸ்தான் அதன் வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.