மீண்டும்..! இணையத்தில் வைரலாகும் ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
ஆப்கானிஸ்தானின் முன்னணி தொலைக்காட்சி சேனலில் காலை நிகழ்ச்சி பெண் தொகுப்பாளருடன் மீண்டும் ஒளிபரப்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு நாட்டில் உள்ள பெண்கள் குறிப்பாக வேலைக்கு செல்பவர்களின் நிலை குறித்த பெரியளவில் கவலை எழுந்தது.
ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
மறுநாளே பெண்கள் முகத்தை மூடிய படி புர்கா அணியாமல் வெளியே வரக்கூடாது என உத்தரவிட்டனர்.
ஊடகத்துறையில் பணியாற்றி வந்த பிரபல தொகுப்பாளர்கள் உட்பட அனைத்து பெண் ஊழியர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
மேலும், வெளிநாட்டு ஊடகத்திற்காக பணியாற்றும் பெண் நிருபர்களும் முகத்தை மூடிய படி புர்கா அணிய வேண்டும் என உத்தரவிட்டனர்.
விளையாட்டு வீராங்கனைகள், பெண் பத்திரிகையாளர்கள், வங்கி போன்ற பொதுதுறையில் பணியாற்றி வந்த பெண்கள் என பலர் தங்கள் எதிர்காலம் குறித்து கவலையை வெளிப்படுத்தினர்.
ஆனால், நாங்கள் மாறிவிட்டோம், ஷரியா சட்டத்தின் கீழ் நாட்டில் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்படும், நிலைமை சரியானதும் பெண்கள் பணிக்கு திரும்பலாம் என தலிபான்கள் உறுதியளித்தனர்.
ஆகஸ்ட் 31ம் திகதியோடு ஆப்கானிஸ்தானில் இருந்த வெளிநாட்டு படைகள் வெளியேறியதை தொடர்ந்து தற்போது புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணியில் தலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மெல்ல மெல்ல ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னணி தொலைக்காட்சி சேனலான TOLO டிவி, காலை நிகழ்ச்சியை பெண் தொகுப்பாளருடன் மீண்டும் ஒளிபரப்ப தொடங்கியுள்ளது.
TOLO சேனலை இயக்கும் MOBY குழுமத்தின் இயக்குனர் Saad Mohseni வியாழக்கிழமை இந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
TOLO TV’s breakfast show, Bamdad e Khosh, is back on with a female host via @TOLO_TV pic.twitter.com/UM1UQEb0WV
— Saad Mohseni (@saadmohseni) September 2, 2021
குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதை ஆப்கானியர்கள் உட்பட பலர் வரவேற்றுள்ளனர்.