ஆயுத கிடங்கை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ராணுவம்: பயங்கரவாதிகள் 4 பேர் கைது
ஆப்கானிஸ்தானில் உள்ள ஆயுத கிடங்கை அந்த நாட்டு இராணுவம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான்கள் ஆட்சி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக தெரிவித்ததை தொடர்ந்து 2021ல் அங்கு தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
இதையடுத்து ஆப்கானிஸ்தானில் கடுமையான ஆடை கட்டுப்பாடு, பெண்களின் கல்வி உரிமை நிராகரிப்பு போன்ற கராரான சட்டத்திட்டங்களை தாலிபான்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
KMTC
அத்துடன் தாலிபான்கள் ஆட்சிக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத செயல்களும் வெகுவாக அதிகரித்து இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
ஆயுத கிடங்கை கைப்பற்றிய ஆப்கான் ராணுவம்
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பர்வான் மாகாணத்தில் உள்ள ஆயுத கிடங்கை ஆப்கானிஸ்தான் ராணுவம் கைப்பற்றியுள்ளது.
இந்த ஆயுத கிடங்குகளில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த கைப்பற்றலின் போது 4 பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் ராணுவம் கைது செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
The New York Times/Redux
இதனைப் போல கஜினி மற்றும் உருஸ்கான் ஆகிய மாகாணங்களில் உள்ள ஆயுத கிடங்குகளையும் ராணுவம் கைப்பற்றி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |