பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் - 15 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல்
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தலிபான் ஆட்சிக்கு தொடக்கத்தில் பாகிஸ்தான் ஆதரவு அளித்து வந்தாலும், தற்போது இரு நாடுகளுக்கிடையேயான உறவு மோசமடைந்து வருகிறது.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கும் தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு, பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி, பாகிஸ்தானின் வான் படை ஆப்கானிஸ்தானின் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை கண்டித்த ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு, இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தது.
12 பேர் உயிரிழப்பு
இந்நிலையில், நேற்று தலிபான் ராணுவம் எல்லையில் உள்ள மாகாணங்களான குனர், ஹெல்மண்ட், பக்டியா ஆகிய பகுதிகளில் உள்ள பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சில ராணுவ நிலைகளை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பதிலடி தாக்குதல் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், மீண்டும் எதிர்தரப்பு எங்கள் நாட்டின் எல்லைக்குள் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் எச்சரித்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையான பதற்றம் கவலை அளிப்பதாகவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கத்தார் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |