ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் - 800 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 250 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
கிழக்கு ஆப்கானிஸ்தானில், நேற்று 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு, ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில், 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, அடுத்த 20 நிமிடத்தில், 4.5 மற்றும் 5.2 ரிக்டர் அளவில் அடுத்தது நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக 800 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,500 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
"நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அணுக மீட்புக்குழுவினருக்கு கடினமாக உள்ளது. மீட்பு குழுக்கள் இன்னும் களத்தில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள வீடுகள் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டவை அல்ல" என சுகாதார அமைச்சரகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |