ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்... - பதறியடித்து ஓடிய மக்கள்...!
ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான், காபூலில் இன்று காலை 5.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3ஆக பதிவானது.
இது குறித்து நிலநடுக்கவியல் தேசிய மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான், காபூலுக்கு கிழக்கே 85 கிலோமீட்டர் தொலைவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாக அதில் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கியதால் மக்கள் பதறியடித்து வெளியே ஓடி வந்து பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர்சேதமோ, பொருட்சேதமோ குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
நேற்று லடாக்கின் லே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டராக பதிவானது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன, நிலச்சரிவுகள் ஏற்பட்டன, பாகிஸ்தானில் நிலநடுக்கத்தில் 9 பேரும், ஆப்கானிஸ்தானில் 4 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 6-ம் திகதி திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் விளைவாக, உலக நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
An earthquake with a magnitude of 4.3 on the Richter Scale hit 85km East of Kabul, Afghanistan today at 5:49 am IST: National Centre for Seismology pic.twitter.com/FtN27IlsfY
— ANI (@ANI) March 29, 2023