காபூல் நகரை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... உடல் சிதறி பலியான மக்கள்: வெளிவரும் பகீர் தகவல்
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதில் சிறார்கள் உட்பட அப்பாவி மக்கள் பலர் உடல் சிதறி பலியானதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 3 அமெரிக்க ராணுவத்தினரும் தாலிபான்களில் சிலரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நடுங்க வைக்கும் இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பென்டகனின் பத்திரிகை செயலாளர் ஜான் கிர்பி, தற்போதைய சூழலில் பலி எண்ணிக்கை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளிவரவில்லை என்றார்.
இருப்பினும் சிறார்கள் உட்பட அப்பாவி மக்கள் 13 பேர்கள் உடல் சிதறி கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியு:ள்ளது.
We can confirm an explosion outside Kabul airport. Casualties are unclear at this time. We will provide additional details when we can.
— John Kirby (@PentagonPresSec) August 26, 2021
அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் வியாழக்கிழமை காலையில் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு மக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், நாட்டை விட்டு வெளியேற விமானம் கிடைக்குமா என்று மக்கள் காத்திருக்கும் கால்வாய் பகுதி ஒன்றில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மேலும் அமெரிக்க துருப்புகள் நடவடிக்கை மேற்கொண்டு வரும் பகுதியில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காபூல் விமான நிலையத்தின் அருகாமையில் அமைந்துள்ள ஹொட்டல் அருகேயும் இரண்டாவது வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஐஎஸ் ஆதரவு குழுவினரின் வன்முறை பற்றிய அச்சுறுத்தல் அதிகரித்ததால், விமான நிலையத்திற்கு வெளியே குவிந்துள்ள மக்கள் உடனடியாக அந்தப் பகுதியை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.
வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னர் துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடந்துள்ள நிலையில், இது சிதறி ஓடும் அப்பாவி மக்களை குறிவைத்து முன்னெடுக்கப்படும் தாக்குதல் எனவும், இதுபோன்ற செயலை ஐ.எஸ் அமைப்பு மட்டுமே முன்னெடுக்கும் என பரவலாக பேசப்படுகிறது.