காபூல் விமான நிலையத்தில் 2 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்க இராணுவம்! தொடரும் பதற்ற நிலை..
காபூல் விமான நிலையத்தில் ஆயுதம் ஏந்தியதாக கருதப்படும் இருவரை அமெரிக்க வீரர்கள் கொன்றதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
அங்கிருந்து மக்கள் வெளியேறுவதை தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தியது. அதனைத்தொடர்ந்து, நாளை முதல் விமான சேவையை முழுவதுமாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த 2 பேரை அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குப் பிறகு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கானோர் போராடிவரும் நிலையில், திங்களன்று ஒட்டுமொத்தமாக 7 பேர் இறந்துவிட்டதாக அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதில் 5 பேர், புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் ஏறி, பறக்கும்பொது கீழே விழுந்து கொடூரமாக இறந்தவர்கள் ஆவர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
