திராட்சை, உலர்ந்த பழங்களுக்கு மாற்றாக கச்சா எண்ணெய்: ரஷ்யா- ஆப்கானிஸ்தான் இடையே ஒப்பந்தம்
- ரஷ்யா ஆப்கானிஸ்தான் இடையே பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி.
- தாலிபான்கள் அரசின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் தலைவர் நூரிதீன் அஸிஸி தகவல்
ஆப்கானிஸ்தான் திராட்சை, உலர்ந்த பழங்கள் மற்றும் மருத்துவ மூலிகைகளுக்கு மாற்றாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை வாங்க ஆப்கானிஸ்தான் முன்வந்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய போர் தொடங்கியதை அடுத்து பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்தனர்.
இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா தங்களது நட்பு நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் பல்வேறு சலுகைகளை வழங்கியது.
#Afghanistan offered to buy oil products from #Russia by barter in exchange for raisins, dried fruits and medicinal herbs. This was stated by the head of the Ministry of Industry and Trade of the Taliban Nuriddin Azizi. pic.twitter.com/AFsuBZogNg
— NEXTA (@nexta_tv) August 19, 2022
இந்தநிலையில் ரஷ்யாவிடம் இருந்து 1 மில்லியன் பேரல் பீப்பாய் எண்ணெய்களை வாங்க ஆப்கானிஸ்தான் சமீபத்தில் விருப்பம் தெரிவித்தது இருந்தது.
அந்தவகையில் தற்போது திராட்சை, உலர்ந்த பழங்கள் மற்றும் மருத்துவ மூலிகைகளுக்கு ஈடாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் பொருட்களை பண்டமாற்று முறையில் வாங்குவதற்கு ஆப்கானிஸ்தான் முன்வந்ததுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: போதைப்பொருள் சோதனை எடுத்துக்கொண்டுள்ளேன்...பின்லாந்து பெண் பிரதமருக்கு பெருகும் நெருக்கடி
இதுத் தொடர்பான தகவலை தாலிபான்கள் அரசின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் தலைவர் நூரிதீன் அஸிஸி தெரிவித்துள்ளார்.