போதைப்பொருள் பரிசோதனை எடுத்துக்கொண்டுள்ளேன்...பின்லாந்து பெண் பிரதமருக்கு பெருகும் நெருக்கடி
- பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் மைக்கோ கர்ணன் குற்றச்சாட்டு
- வெள்ளிகிழமை போதைப்பொருள் சோதனை எடுத்துக்கொண்ட பிரதமர் சன்னா மரீன்
பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் பார்ட்டியில் நடனமாடும் வீடியோ வெளியானதை தொடர்ந்து வெள்ளிகிழமையான இன்று போதைப்பொருள் சோதனையை எடுத்துக் கொண்டதாக சன்னா மரீன் தெரிவித்துள்ளார்.
பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக சன்னா மரீன்(36) பதவி வகித்து வருகிறார், இவர் உலகின் மிக இளவயது பிரதமரும் ஆவார்.
பின்லாந்து பிரதமர் சன்னா மரின் (36) சமீபத்தில் பிரைவேட் பார்ட்டியில் நடனமாடும் வீடியோ வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ICYMI: Finland PM said she didn’t do drugs at party after video leak pic.twitter.com/QpU3PPddpu
— Insider Paper (@TheInsiderPaper) August 19, 2022
இதனைத் தொடர்ந்து விருந்தில் போதைப்பொருள் உட்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மைக்கோ கர்ணன் அவரை குற்றம் சாட்டியுள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டிற்கு மரீன் மறுப்பு தெரிவித்தார்.
இந்தநிலையில் பின்லாந்தின் பிரதமர் சன்னா மரீன் வெள்ளிக்கிழமை தன்னை போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுவரை ஒருபோதும் சட்டவிரோதமான போதைப்பொருகளைப் பயன்படுத்தியது இல்லை எனவும் உறுதியளித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: நான்கு கார் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்து...தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸில் பரபரப்பு
அத்துடன் இதுத் தொடர்பான முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வரும் எனவும் சன்னா மரீன் தெரிவித்துள்ளார்.