மூன்று நாடுகளை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தானில் 950 பேர் வரை மரணம்
கிழக்கு ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 950 பேர் வரை கொல்லப்பட்டதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மாகணத்தின் பெரும்பாலான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சரிந்து விழுந்த நிலையில், இதில் 950 பொதுமக்கள் வரை பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவான இந்த பயங்கர நிலநடுக்கத்தில் 600 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
In #Afghanistan, a powerful earthquake killed 280 people and injured more than 600 with varying degrees of severity. pic.twitter.com/QKsLo06sWS
— NEXTA (@nexta_tv) June 22, 2022
இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் அரசு செய்தி நிறுவனமான பக்தர்(Bakhtar) வெளியிட்ட தகவலில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் சென்று சேர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம் காரணமாக 950 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 600 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாகவும், டஜன் கணக்கான வீடுகள் தரைமட்டம் ஆகி இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக தாலிபான்கள் அரசின் செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி(Bilal Karimi)ட்வீட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், பேரழிவை தடுப்பதற்காக அனைத்து விதமான மீட்புக் குழுக்களையும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் அதன் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பிற இடங்களில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோல் 6.1 என்ற அளவில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் குறித்து பாகிஸ்தான் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கத்தின் மையமானது ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்டில் இருந்து தென்மேற்கே 44 கிமீ தொலைவில் சுமார் 50.8 கிலோமீட்டர் ஆழத்தில் துல்லியமாக அதிகாலை 1:54 மணிக்கு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: சுவிட்சர்லாந்தை விட்டு உக்ரைன் அகதிகள் வெளியேற உத்தரவு... அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல்
மேலும் ஐரோப்பிய நில அதிர்வு ஆய்வு நிறுவனம் EMSC வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கமானது சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிற்கு பரவியதாகவும், இந்தியா, பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ள 119 மில்லியன் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளது.