காபூல் நகரை மீண்டும் கைப்பற்றிய தாலிபான்களின் மொத்த சொத்துமதிப்பு தெரியுமா?
ஆப்கானிஸ்தானின் ஆட்சிப்பொறுப்பை 1996கு பிறகு மீண்டும் கைப்பற்றியுள்ள தாலிபான் பயங்கரவாத அமைப்பின் மொத்த சொத்து மதிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய ஆப்கான் முஜாஹிதீன்களின் ஒரு பகுதியினர் 1994ல் தாலிபான்கள் என புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கினர். பஷ்தூன் மொழியில் தாலிபான் என்றால் மாணவர்கள் என பொருள்.
அதே காலகட்டத்தில் தாலிபான்களுக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தானில் ஒரு கூட்டமைப்பு உருவானது. ஆனால் உள்நாட்டு போர்களால் சிதைந்து போயுள்ள நாட்டில் தங்களால் அமைதியும் நிலைத்தன்மையும் அளிக்க முடியும் என தாலிபான் அமைப்பு வாக்குறுதி அளித்ததை மக்கள் நம்பினார்கள்.
This is, perhaps, one of the saddest images I've seen from #Afghanistan. A people who are desperate and abandoned. No aid agencies, no UN, no government. Nothing. pic.twitter.com/LCeDEOR3lR
— Nicola Careem (@NicolaCareem) August 16, 2021
இதனையடுத்து, தாலிபான்கள் அமைப்பு உருவான இரண்டு ஆண்டு காலத்திலேயே, 1996ல் காபூல் நகரை கைப்பற்றிய அந்த அமைப்பு தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தது.
ஆனால் அல்கொய்தா தலைவர் பின் லாடன் தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து அமெரிக்கா ராணுவம் 2001ல் ஆப்கானிஸ்தானில் இருந்து தாலிபானை வெளியேற்றியது.
1990 காலகட்டங்களில் காணப்பட்ட தாலிபான்கள் அல்ல தற்போதைய புதிய தாலிபான் என கூறப்படுகிறது. உயர் ரக ஆயுதங்கள், புத்தம் புது வாகனங்கள், தங்கள் கருத்துக்களை வெளியிட தனியாக செய்தி ஊடகம் என தாலிபான்கள் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
ஆனால் ஆட்சி அதிகாரம் ஏதுமற்ற தாலிபான்களுக்கு எங்கிருந்து இத்தனை பணம் என எழும் கேள்விகளுக்கு, போதை மருந்து கடத்தல் என்றே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் வெளிநாடுகளில் இருந்தும் நிதி தாலிபான்களுக்கு குவிந்து வருவதாக கூறப்படுகிறது. 2016ல் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 10 தீவிரவாத அமைப்புகளின் சொத்துமதிப்பு பட்டியலில் 5வது இடத்தில் தாலிபான் இருந்துள்ளது.
அப்போது 2800 கோடி சொத்துமதிப்பு கொண்டிருந்த தாலிபான் அமைப்புக்கு 2019-20ல் 4,400 கோடி என அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது இவ்வாறிருக்க, 19 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா மொத்தமாக 3 லட்சம் டொலர் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.