ஆப்கானில் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தீ வைத்த தாலிபான்!
ஆப்கானிஸ்தானில் பொழுதுபோக்கு பூங்கவை தாலிபான்கள் தீ வைத்து எரித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது. ஆட்சி அதிகரத்தை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் தாங்கள் எந்த ஒரு நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம் எனவும் உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும்,ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் ஒரு அசாதாரண நிலையே நீடிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதற்கிடையில், ஷெபர்கன் (Sheberghan) நகரில் இருந்த போக்டி பொழுது போக்கு பூங்காவிற்குள் (Bokhdi Amusement Park) நுழைந்த தாலிபான் அமைப்பினர், பூங்காவில் ராட்டினம் போன்றவற்றில் ஆடிப்பாடி மகிழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இறுதியில் அந்த பொழுது போக்கு பூங்கா தீப்பற்றி காட்சிகளும் வேகமாக பரவி வருகின்றன.
இஸ்லாமிய வழக்கத்திற்கு எதிராக பொழுது போக்கு பூங்காவில் சிலைகள் போன்றவை இருந்ததால், அந்த பொழுது போக்கு பூங்காவை தாலிபான்கள் தீ வைத்து எரித்து இருக்கலாம் என டுவிட்டரில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
The Bokhdi Amusement Park was set on fire by Taliban insurgents in Begha, Sheberghan. The reason is that the statues/idols standing there are in Public access Idols are illegal in Islam, This is the logic of the Taliban's brutal emirate. The homeland is occupied.#Afghanistan pic.twitter.com/MBuYsQQbxk
— Ihtesham Afghan (@IhteshamAfghan) August 17, 2021