மீண்டும் திறக்கப்படும் காபூல் விமான நிலையம்.. விமான சேவையை தொடங்கும் ஆப்கானிஸ்தான்! வெளியான முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை முதல் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கும் என ஆப்கான் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவரை மேற்கோள் காட்டி Al Jazeera தகவல் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15ம் திகதி தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.
இதனையடுத்து, காபூல் விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக காபூல் விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தனர்.
பின், காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அமெரிக்க உட்பட வெளிநாட்டு படைகள், மக்களை வெளியேற்றும் பணிகளை தொடங்கினர்.
இதனிடையே, கூட்ட நெரிசல், தற்கொலை தாக்குதல் என காபூல் விமான நிலையம் தொடர்ந்து பதட்டம் நிலவி வந்தது.
ஆகஸ்ட் 31ம் திகதியோடு வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்தனர்.
காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பழைய படி விமான சேவையை தொடங்க கத்தார் விமான போக்குவரத்து உதவியை ஆப்கான் விமான போக்குவரத்து ஆணையம் கோரியிருந்தது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் கத்தார் விமானம் ஒன்று காபூல் விமான நிலையத்தில் தரையிற்ஙகிய காட்சிகள் வெளியானது.
ஆப்கானிஸ்தானின் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் காபூல் விமான நிலையத்தின் தொழில்நுட்ப அம்சங்களைக் கையாள கத்தாருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டார் தொழில்நுட்பக் குழு விரைவில் காபூல் விமான நிலையத்தை செயல்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்கும் என ஆப்கானிஸ்தானின் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை முதல் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கும் எனவும், வெளிநாடுகளுக்கான விமான சேவையை தொடங்க இன்னும் நாட்கள் ஆகும் என ஆப்கானிஸ்தானின் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளதாக Al Jazeera தகவல் தெரிவித்துள்ளது.